நமது பெரியவர்களுக்குத் தெரிந்த வரை நமது பூர்வீக பெரியவர் "ஸ்ரீனிவாச
ஜோஸ்யர் ". இவரின் மனைவி பெயர் தெரியவில்லை .இவர் 350 ஆண்டுகளுக்கு முன் வேங்கூர் என்ற கிராமத்தில் வாழ்ந்தார் . இவர் ஜோதிடக் கலையில் வல்லவர் . இவருக்கு "வாரணாத" ஜோஸ்யர் என்ற காரணப்
பெயர் இருந்தது . அதாவது ஜோதிடக் கலை யில் ஆயிரம் மத யானைகளுக்கு ஒப்பானவர் என்பதாகும்.
பெயர் இருந்தது . அதாவது ஜோதிடக் கலை யில் ஆயிரம் மத யானைகளுக்கு ஒப்பானவர் என்பதாகும்.
இவர் சேதுபதி மன்னனை ஒரு காட்டில் சந்தித்துச் சொன்ன ஆறுடம் பலித்து அதில் மகிழ்ந்த அரசன் பரிசாக தந்த கிராமம் குளத்தூர் (.அரசனை சந்திந்தது,ஜோதிடம் கூறியது செவி வழி செய்தி) . பூமி தானம் வழ்ங்கியது வரலாற்று உண்மை .இவர்கள் திருவண்ணாமலை ப்ருஹச்சரணம் என்று கூறப்பட்டனர். ப்ருஹத் +சரணம் =GREAT MIGRATION என வரலாற்று ஆசிரியர் கூறுவர்
இவரின் . பெருமை அறிந்து மறுமுறை சேதுபதிமன்னன் பரிசளித்தான் . அதுவே இன்றைய "மிளகனூர்" .இவர்கள் வழியில் வந்த ராமலிங்கம் ஐயர் தன் மனைவி சீதா லக்ஷ்மி அம்மாள் ,தன மகன் சுப்பையர் உடன் சுமார் 240 ஆண்டுகளுக்கு முன் இங்கு நம் குல தெய்வமான மஹா தபஸ்வியைப் பிரதிஷ்டை செய்து பூஜையைத் தொடங்கினார்.