அவர்களுக்கும் நமது முன்னோர்களுக்கும் எனது நன்றியைப் பணிவுடன் சமர்பித்து க் கொள்கிறேன்.
நம் முன்னோர்களில் பலரைப் பற்றிய விவரங்கள் சரியான முறையில் அறிய இயலவில்லை. ஆதலால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எழுத இயலவில்லை. எனது பாட்டி ,அப்பா, அம்மா இவர்களிடம் கேட்டு அறிந்து நம் முன்னோர்களைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்த அளவு தந்துள்ளேன்.GREAT LEGEND -ஆக நம் முன்னோர்கள் வாழ்ந்து உள்ளனர் என்பதை இங்குபெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
-கிருத்திகா சத்தியநாராயணன்

Wednesday, 30 March 2011

நம் மரபினர் வரலாறு

நமது பெரியவர்களுக்குத் தெரிந்த வரை நமது பூர்வீக பெரியவர் "ஸ்ரீனிவாச 
ஜோஸ்யர்  ". இவரின் மனைவி பெயர் தெரியவில்லை .இவர் 350 ஆண்டுகளுக்கு முன் வேங்கூர்  என்ற கிராமத்தில் வாழ்ந்தார் . இவர் ஜோதிடக் கலையில்  வல்லவர் . இவருக்கு "வாரணாத" ஜோஸ்யர் என்ற காரணப்
பெயர் இருந்தது . அதாவது ஜோதிடக்  கலை யில் ஆயிரம்  மத யானைகளுக்கு ஒப்பானவர் என்பதாகும்.
         இவர் சேதுபதி மன்னனை ஒரு காட்டில் சந்தித்துச் சொன்ன ஆறுடம் பலித்து அதில் மகிழ்ந்த அரசன் பரிசாக தந்த கிராமம் குளத்தூர் (.அரசனை சந்திந்தது,ஜோதிடம் கூறியது செவி வழி செய்தி) . பூமி தானம் வழ்ங்கியது  வரலாற்று உண்மை .இவர்கள் திருவண்ணாமலை ப்ருஹச்சரணம் என்று கூறப்பட்டனர். ப்ருஹத் +சரணம் =GREAT MIGRATION என   வரலாற்று ஆசிரியர் கூறுவர் 
         இவரின் . பெருமை அறிந்து மறுமுறை சேதுபதிமன்னன் பரிசளித்தான் . அதுவே இன்றைய "மிளகனூர்" .இவர்கள் வழியில் வந்த ராமலிங்கம் ஐயர் தன் மனைவி சீதா லக்ஷ்மி அம்மாள் ,தன மகன் சுப்பையர் உடன் சுமார் 240  ஆண்டுகளுக்கு  முன் இங்கு நம் குல தெய்வமான மஹா தபஸ்வியைப்  பிரதிஷ்டை செய்து பூஜையைத்  தொடங்கினார். 

1 comment:

  1. நன்றி ,,அழகு ஊறிய விதம் .......vinoth

    ReplyDelete