அவர்களுக்கும் நமது முன்னோர்களுக்கும் எனது நன்றியைப் பணிவுடன் சமர்பித்து க் கொள்கிறேன்.
நம் முன்னோர்களில் பலரைப் பற்றிய விவரங்கள் சரியான முறையில் அறிய இயலவில்லை. ஆதலால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எழுத இயலவில்லை. எனது பாட்டி ,அப்பா, அம்மா இவர்களிடம் கேட்டு அறிந்து நம் முன்னோர்களைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்த அளவு தந்துள்ளேன்.GREAT LEGEND -ஆக நம் முன்னோர்கள் வாழ்ந்து உள்ளனர் என்பதை இங்குபெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
-கிருத்திகா சத்தியநாராயணன்

1.மிளகனூர் மீனாக்ஷி அம்மன் கோவில் தல வரலாறு



மானமதுரைக்கு அருகே 7கி.மீ தொலைவில் உள்ள எளிய கிராமம் மிளகனூர்.கிட்ட தட்ட 250 வருடங்கள் முன்பு அமைதி வாழ்வை நாடி இந்த   கிராமத்தை நம் முன்னோர்கள்  தேர்வு செய்தனர் .
                     சுமார் 190 வருடங்கள் முன்பு மணியார அய்யர் @
  சுப்ரமணிய அய்யர்   தான் வீடு   கட்டும்போது தன் கனவில் வந்த அன்னை அருள்மிகு மீனாக்ஷி தனக்கு கோவில்கட்ட உத்தரவிட்டதால் ஏற்படுத்தபட்டது தான் அருள்மிகு ஸ்ரீ.மிளகனூர் மீனாக்ஷி அம்மன் திருக் கோவில் .